உறவும் பிரிவும்

சொந்த பந்தங்கள் இடையே
பிரிவு வந்து விட்டால்
விட்டு விடுங்கள்
தொடரவும் வேண்டாம்
அனாவசியமாக
கவலையும் வேண்டாம்...!!

காலங்கள் மாறும் போது
தவறுகள் உணர்ந்து
இணையும் நேரங்கள்
வாழ்வில் வரலாம்...!!

இறந்த பயிருக்கு
தண்ணீர் விட்டு
வளர்க்க நினைப்பதும்
அறுந்து போன உறவுக்காக
கண்ணீர் விட்டு நிற்பதும்
முட்டாள்தனமாகும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Dec-21, 6:30 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : uravum pirivum
பார்வை : 172

மேலே