நானிங்கு இருப்பதை கண்டும்காணாமல் செல்வதோ
வானவெளி அரங்கில் வட்டமிடும் வெண்ணிலாமுகம்
தேனின்துளிகள் சிந்திக்கிடக் கும்செவ்விதழ் கிண்ணம்
மானின்விழி தேனமுதுச் செந்தமிழ் பூவே
நானிங்கு இருப்பதை கண்டும்காணா மல்செல்வதோ !
பூவே என்று விளித்ததால்
தேனின்துளிகள்----தேமா நறும்பூ
கண்டும்காணா---தேமா தண்பூ
---எனும் நாலசை பூச்சீரால் இலக்கண இலக்கிய அழகு
பெறுகிறது