அவனே என் காதலன்

"அதிசய மாயன்,
ஆனந்த மாறன்,
அழகிய மார்பன் ,
அபூர்வ மாலன். (அதிசய)

1. வசந்த காலத்தின்
மணம் தரும் வாசன்,
நம் மனத்தில் நினைத்தால்
மயங்கிடும் நேசன்.
வாசன்... நேசன்... (வசந்த)

குழலிசை மழைதனை
பொழிந்திடும் ராசன்,
கூடிடும் கோதையர்
கொடியிடை தாசன்.

"அதிசய மாயன்,
ஆனந்த மாறன்,
அழகிய மார்பன் ,
அபூர்வ மாலன்.

2. மின்னிடும் குழலது
அசைந்திடும் காந்தன்,
ஆண்மையின் இலக்கணம்
ஒளிர்ந்திடும் பிரகாசன் ,

தேவர்கள் வணங்கிடும்
காவிய நாதன்,
அந்த தேவனை நினைத்தால்
அருளிடும் வேந்தன்.
அருளிடும் வேந்தன்...

ஒரு புறம் பார்த்தால்
கோகுல மாதவன்,
மறுபுறம் பார்த்தால்
துவாரகை நாயகன்,

முகம் மட்டும் பார்த்தால்
கதிரின் ஒளி அவன்,
முழுவதும் பார்த்தால்
வரம் தரும் வேதன்,
வரம் தரும் வேதன்...

"அதிசய மாயன்,
ஆனந்த மாறன்,
அழகிய மார்பன் ,
அபூர்வ மாலன்."

எழுதியவர் : (4-Dec-21, 12:21 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : avne en kaadhalan
பார்வை : 97

மேலே