பேரின்பம்

வருவதும் போவதுமாய் இருந்து இன்பமான
துன்பமாய் இருப்பவை மோகமும் காமமும்
இதை உணர்ந்து இவற்றின் பிடியிலிருந்து
விடுபட்டால் என்றும் நிலையாய் இருக்கும்
இறை வழி நம்கண்முன் தெரியும் நமக்கு
துணையாய் நின்று நல்வழி காட்டி
நிலையான பேரின்பம் கிட்டிட செய்யும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Dec-21, 2:23 pm)
Tanglish : perinbam
பார்வை : 76

மேலே