வெற்றி - தோல்வி

வெற்றியடைந்தவர்களை
முன்மாதிரியாகவும்
தோல்வியடைந்தவர்களை
ஒருமாதிரியாகவும்
பார்ப்பதை நிறுத்துங்கள்...!
முதல் முயற்சியில்
வெற்றி பெற்றவன்
வாசலோடு
வழியனுப்பப்படுகிறான்...!
தோல்வி கண்டும்
முயற்சி செய்பவன்
கருவறைத் தாண்டியும் - தன்
தடங்களைப் பதிக்கிறான்...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (4-Dec-21, 7:56 pm)
சேர்த்தது : Vishnudeep B
பார்வை : 67

மேலே