தாரமே தாரமே வா..

தாரமே தாரமே வா..
என்னை தாங்கி கொள்ளவும்
ஏந்திக் கொள்ளவும் வா..

நான் தடம் மாறும் போது..
என்னை தட்டி கேக்கவும்
நல்லதுக்கு தட்டி கொடுக்கவும்
தாரமே வா..

எங்கி இடந்த மனதை
ஏக்கம் தீர்க்க தாரமே வா..
என் எதிர்ப்பு எல்லாம்
எடுத்து எரிய தாரமே வா..

(தாரமே தாரமே வா..)

என்னை தன்மானத்தோடு
வாழ வைக்க தாரமே வா..
என்னை தரணி ஆளா
வைக்க தாரமே வா..

என்னை கேள்வி கேக்க
தாரமே வா..
நன்றை உரைக்கவும்
தாரமே வா..

(தாரமே தாரமே வா..)

என் இதயம் முழுவதும்
நிரம்பிய தாரமே வா..
என் வம்சத்தை வளர்க்க
வைக்கும் தாரமே வா..

நான் தள்ளாடும் போது
என்னை தொடரும் தாரமே வா..
என் உயிராக உன் உயிரில்
கலக்க என் தாரமே வா..

( தாரமே தாரமே வா..)

எழுதியவர் : (5-Dec-21, 7:59 am)
பார்வை : 39

மேலே