அவளுடனான பயணங்கள் பாகம் 1

கூடி வந்த நாட்களில்
தேடி வந்த பாவையின்
பார்வை பார்த்து வியத்திட...

காலப்போக்கில் பாதமும்
அவள் பாதை நோக்கி சென்றிட..

கட்டழகி கடக்கும்போது
கட்டியிழுத்து சென்றிட

நானோ பூவை கண்ட வண்டைப்போல் தொடர்ந்து தொடர்ந்து சென்றிட..

நண்பகலில் விழிக்கவல்லன்
வைகறையில் விழித்திட..

வழியில் உள்ள கடைகளில்
வணக்கம் சொல்லி சென்றவன்
வண்ணவிழி பார்த்ததும் வழி மறந்து சென்றிட....

எழுதியவர் : தினேஸ்குமார் இரா (5-Dec-21, 1:14 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
பார்வை : 196

மேலே