சிறுபூனைக்காலி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிறுபூனைக் காலியிலை சிவ்விஷத்தைப் போக்கும்
உறுகாந்தத் தைச்சிந்தூ ரிக்குஞ் - சிறுமாந்தம்
ஐயங் கபந்தீர்க்கும் ஆர்ந்தகய நோய்விலக்கும்
வையந் தனிலிதனை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

வண்டுகடி முதலான சிலவிடங்கள், மந்தம் சிலேட்டும நோய், கோழைக்கட்டு, சயம் ஆகியவற்றை இவ்விலை போக்கும்; காந்தத்தைச் செந்தூரமாக்கப் பயன்படும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 7:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே