அறத்தினும் ஆராய்ந்துள் புக்கால் பிறப்பறுக்கும் மெய்ந்நூல் தலைப்பட லாகும் – அறநெறிச்சாரம் 41

நேரிசை வெண்பா
(3, 4 ஆம் அடியில் மெல்லின எதுகைகளாக ந், ண்)
(மூன்றாம் அடியில் ய் இடையின ஆசு)

நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்துள் புக்கால் - பிறப்பறுக்கும்
மெ’ய்’ந்’நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
க’ண்’ணோடிக் கண்டதே கண்டு 41

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல் போல

அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை அடையலாம்;

கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மையென எண்ணிக் கற்றுக் கொள்ள முயன்றால் உண்மை நூலை அடைய இயலாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 8:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே