புத்தகம் பேசினால்

புத்தகம் பேசினால்..!

பலதும் பாடுபட்டு
படைத்தவன்

என்ன நினைத்து
படைத்தானோ ?

என்னை வாசிக்க
எழுத்து அச்சுக்களாய்
உன் கண் முன்
வந்தேன்

மேய்ப்புல் மேய்வது
போல்
கண்களால் மேய்ந்து
பக்கங்களை திருப்பி
காணாமல் போய்
விட்டாய்..!

வரிசையில் அடுக்கப்பட்டு
அலங்கார காட்சிகளாய்
உன்னை அறிவாளியாய்
காட்டிட கண்ணாடி
சட்டமிட்ட
அடுக்கு ஒன்றில்
காத்திருக்கிறேன்

நீ என்னை புரிய
வைக்க
இனி
என்னால் என்ன
செய்ய முடியும்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Dec-21, 9:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : puththagam pesinal
பார்வை : 191

மேலே