நல்ல நெருஞ்சில் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நல்ல நெருஞ்சிதுல நாளுங் கிரிச்சரத்தை
வல்ல சுரமனலை மாற்றுங்காண் - மெல்லியலே
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
கூனுறுமெய் வாதமும்போக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

மேகவெட்டை நீர்ச்சுருக்கு வீறுதிரி தோஷம்புண்
வேகசுர தாகவெப்பும் விட்டொழியும் - போகந்
தருஞ்சின் மதலைமொழித் தையலே நல்ல
நெருஞ்சி லதனை நினை

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சொட்டு மூத்திரம், சுரவெப்பம், திரி தோடம், புண், சுரத்தினால் வந்த தாகம், நீரடைப்பு, முடவாதம், பிரமேக வெள்ளை, கல்லடைப்பு, வெப்பம் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே