யானை நெருஞ்சில் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந் தானழிக்குந்
தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்காண் - நாகத்தாற்
தேனையரும் பாகைத் திருத்துங் கிளிமொழியே
யானை நெருஞ்சி லது

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

யானை நெருஞ்சி லதுசீ தளமாகும்
மானே யெலும்புருக்கி மாற்றுங்காண் - மேனிதனில்
உள்ள எரிச்சல் உழலையுள் தாகமொடு
தள்ளுபித்த மும்போக்குந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வெள்ளை வீழ்ச்சி, வெண்குட்டம், கல்லடைப்பு, எலும்புருக்கி, உடல் எரிவு, உழலை, தாகம், தள்ளுபித்தம், ஆகியவற்றை நீக்கும்; சீதளத்தை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே