நிலவே நீ யென் சொந்தம்

பல்லவி
அழகே வருவாய் அருகே

அனுபல்லவி
வருவாய் கனியே அமுதே இனிதே
தருவாய் சுளையாய் அதரச் சுவையை
விரும்பி முழுதும் நிறைவாய் ததும்பும்
கரும்பைப் பிழிந்து ரசமும் கொடுப்பாய்

சரணம்
தென்றலுந் தீண்டவு னைப்பொறுக்கேன்
***** இன்பமுன் பூங்கர மென்சொந்தம்

வின்விளை வண்ணமெ ழுவில்வனப்புன்
****"** இன்னழ கத்தனையும் யென்சொந்தம்

தன்குளிர் வெண்நில வுன்வதனம்
****** அள்ளியென் நெஞ்சணைக் கச்சொந்தம்

உன்னுடை யங்கம தைவிளக்கும்
*****. உவமையும் நாணிடும் தலைக்குனிந்தே........

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-21, 7:53 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே