உண்மைத் துறவியினை உணரும் முறை – அறநெறிச்சாரம் 43

நேரிசை வெண்பா

துறந்தார் துறந்தில ரென்றறிய லாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம் - துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை. 43

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

துறவிகள் மேற்கொண்டொழுகும் வேடத்தால் பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம்; அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும் அறியலாம்.

குறிப்பு:

வேடம் - வேஷம், கொள்ளுதல் - பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக் கொண்டு மற்றவை விடல், கொடுத்தல். உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 7:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே