காற்றால் கற்போம்

கட்டளைக்கலித்துறை

வெளிவிடும் காற்றதும் நச்சாய் வருகையில் உள்ளிருந்தே
தளர்ந்த உடலிலும் மென்மை உடம்பிலும் செல்லையிலே
வளியது மாறுமோ தன்னிலை மாறிடும் தன்மையிலே
களையாய் பிறந்த உயிர்களை காத்திடும் நற்காற்றுமே ---- (1)

பூதமாம் ஐந்தினை புண்ணாய் சிதைத்து பொடியனவே
பாதகம் செய்திட நச்சைக் கலந்து விலையைவைத்தே
ஆதவன் சூட்டையே மாற்றிடும் வண்ணம் கழிவினையே
பேதமே இன்றி கலக்கும் மனிதனை நீக்கலாமே ---- (2)

பஞ்சின் வடிவிலே நீரினை மாற்றியே மேகமென்றே
அஞ்சும் வகையில் உராய்ந்து இடியென வெம்மையிலே
பஞ்சம் அகற்றிடும் வண்ணம் பொழிந்து வளமெனவே
நெஞ்சம் குளிர பொழிந்திடும் மாரியே நீயேதாயே ---- (3)

நெருப்பாய் கதிரும் உதிரும் கதிரால் உறிஞ்சிடுமே
உருவேத் தெரியா வளியும் கடத்த உதவிடுமே
பரவிக் கிடக்கிற நீரது ஆவியாய் சென்றிடுமே
உருகியே மண்ணும் பொசுங்கிடும் நீரை இழந்ததாலே ---- (4)

பெரிய பிழையைத் துணிந்தே அழகாய் செயலாக்கியே
அரிய கனிம வளத்தை அழிக்கும் மனிதனையே
உரியதாய் காரணம் இன்றியே சிக்கலில் தள்ளிடுமே
அருமை இயற்கையும் ஆழ்ந்தே வெளிவிடும் ஆற்றலாலே ---- (5)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Dec-21, 8:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே