காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப் போமாறு செய்வார் புரிந்து – அறநெறிச்சாரம் 45

நேரிசை வெண்பா

அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி தன்னியல்பே நாடும் - அழலதுபோல்
காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து 45

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டவன் அதற்குப் பகையான நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான்; அதனை அடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,

காமவெகுளி மயக்கங்களால் ஆகிய கொடிய வினையாலாகிய தளையை அழித்து வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம் செய்வோரே முனிவர் ஆவர்.

குறிப்பு; நிழல் ஆதி - நிழல், நீர், காற்று, உணவு, உடை என்பன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-21, 3:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே