உடலில் உப்பின் சுவை

குறட்டாழிசை

உழவா நிலமும் அகழா குளமும்
அழிவினை எளிதாய் பெறும்

பழிக்கு அஞ்சா பகுத்து அறிவு
வழியாய் அமையும் துயர்க்கு

மொழியை எள்ளும் உலகினர் எவரும்
தழைப்பர் களையென எங்கும்

ஆழியின் நீரால் மட்டுமே உலகம்
வாழ்வினை அடையுது செழிப்பாய்

கடலில் பிறந்தோம் என்பதால் உயிரின்
உடலில் உப்பின் சுவை

காற்றின் ஓடுதல் குறைந்தால் சிதைந்து
ஈற்றினை அடையும் ஞாலம்

பணத்தின் பயனது கூடிடின் எங்கும்
குணமது குன்றித் தேயும்

உழைக்கா கிடைக்கும் பணமும் உணவும்
அழிக்கும் கொள்வரை நோயாய்.

அறிவியல் ஆளுமை என்றோ ஒருநாள்
குறைதலை அடையும் அறி.

கற்றல் புரிதல் ஏற்றல் வழியாய்
பற்றுதல் பெருமைத் தரும்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Dec-21, 5:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 50

மேலே