காதல் கோட்டை பொய்யன்

நேரிசை வெண்பா


கள்வனாம் பொய்யனாம் காதலனை பேச்சிலெங்
கள்நாணக் கோட்டையுள் நம்பிவிட்டோம் --- கள்வனின்
பொய்யும் பணிவான சொல்லும்கோட் டையழிக்கும்
மெய்ப்படை யானதிங் கே

மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல
இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.

குறள் 8/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 9:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே