வெண்ணிலா தவழ்ந்து வந்து - தாத்தா பேத்தி தாலாட்டு எண் 13

"வெண்ணிலா தவழ்ந்து வந்து:
தாத்தா பேத்தி தாலாட்டு எண்" 13

வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா -
கீழ்வானம் சிவந்தது போல்
என் முகமும் மலர்ந்தம்மா - காலை
கீழ்வானம் சிவந்தது போல்
என் முகமும் மலர்ந்தம்மா
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
என் மடியினில் ஏறுதம்மா

மழலை கீதம் கேட்கையிலே
இன்பநாதம் இதமாய் ஒலிக்குதடி - உந்தன்
மழலை கீதம் கேட்கையிலே
இன்பநாதம் இதமாய் ஒலிக்குதடி
தென்றல் தீண்டும் இனிமைகூட
உந்தன் விரலில் வருகுதம்மா - மேனியில்
தென்றல் தீண்டும் இனிமைகூட
உந்தன் விரலில் வருகுதம்மா -
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
என் மடியினில் ஏறுதம்மா

மார்பினிலே உதைக்கும் நேரம்
கவலை கரைந்து போகுதம்மா - என்னை
மார்பினிலே உதைக்கும் நேரம்
கவலை கரைந்து போகுதம்மா
உன்னை சுமக்கும் பொழுதெல்லாம்
என்னை மறந்து போனேனம்மா - நான்
உன்னை சுமக்கும் பொழுதெல்லாம்
என்னை மறந்து போனேனம்மா
என்னை மறந்து போனேனம்மா

இளமை அகன்று போனதம்மா
முதுமை மெதுவாய் அணைக்குதம்மா - எனக்கு
இளமை அகன்று போனதம்மா
முதுமை மெதுவாய் அணைக்குதம்மா
உன்னோட களிக்கும் நேரம்
இறைவன் தந்த பரிசம்மா - நாளும்
உன்னோட களிக்கும் நேரம்
இறைவன் தந்த பரிசம்மா -
இறைவன் தந்த பரிசம்மா -
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
என் மடியினில் ஏறுதம்மா

வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா -
கீழ்வானம் சிவந்தது போல்
என் முகமும் மலர்ந்தம்மா - காலை
கீழ்வானம் சிவந்தது போல்
என் முகமும் மலர்ந்தம்மா
வெண்ணிலவு தவழ்ந்து வந்து
என் மடியினில் ஏறுதம்மா - இன்று
என் மடியினில் ஏறுதம்மா

இந்த கவிதையினை காணொளியாக யூடுபே இணையதளத்தில் காண https://youtu.be/wb0MoEuavbw தேர்வு செய்யவும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Dec-21, 11:14 pm)
பார்வை : 65

மேலே