வரட்டா
கண்ணே!... உன்
நெற்றி பொட்டாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!.....
வியர்வை பட்டு கலைந்து
விடுவேன்!
மல்லி மொட்டாக உன் கூந்தலில்
இருந்து விடட்டா ?
வேண்டாம்!......
ஒரே நாளில் உதிர்ந்து விடுவேன்!
உன் பட்டு உடையாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!......
அழுக்காகி விலகி விடுவேன்!
மாட்டும் காதணியாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!....
நீ மாற்றினால் கழன்று விடுவேன்!
ஒட்டும் காலணியாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!.....
வாசலோடு இருந்து விடுவேன்!
வெளியே இருப்பது எதுவும்
வேலைக்கு ஆவாது போல,
உன் கண்ணில் நுழைந்து,
மனத்தில் குழைந்து,
உயிரில் கலந்து விடட்டா ?
என்றென்றும் உன்னுடனேயே
இருந்து விடுவேன் .
நெருங்கி வரட்டா? "