கட்டு கடங்காத காதல்

உன்னோடு சிரித்த சிரிப்பு
மனதோடு உணர்தேன் பூரிப்பு
உனது கரம் பிடிக்க நினைத்தபோது
சுற்றுப்புறம் பார்க்க தோணவில்லை
அடங்காத அன்பா - கட்டுக்
கடங்காத காதலா..
தந்தையை கண்டா பிள்ளையாய்
விந்தையாய் வித்தை ஆடினேன்
உனது மார்பில் கண்ணீரோடு
தலை நிமிர்த்தி முத்தமிட்டாய்
மலையளவு நிறைவு கண்டேன்
கடலளவு துணிவு கொண்டேன்
கனிவே ... என் கனவே..
தம்பிரானே .. வா ...
உன் வாசம் தா !....