குடிப்பிறந்தான் உண்டுழி நாச்சா முணர்ந்து - சிறுபஞ்ச மூலம் 9

நேரிசை வெண்பா

கொன்றுண்பான் நாசாங் கொடுங்கரிப்போ வானாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானுங்
கண்டுழி நாச்சாங் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சா முணர்ந்து. 9

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

ஓருயிரைக் கொன்று அதன் தசையைத் தின்பவனுடைய நாக்கானது அற்று விழும்;

கொடுமை விளைவிக்கின்ற பொய் சான்று கூறப் போகின்றவனுடைய நாக்கானது அற்று விழும்,

நன்றாகக் கற்றறிந்தவர்களுக்கு எதிரில் கற்றுணராதவனுடைய நாக்கானது அடங்கும்;

தான் சொல்லிய சொல்லைக் கடவாத நெறியில் நடப்பவன் தன்னிடம் கொடுத்த கடனை வாங்கிச் செல்ல வேண்டி வந்தான் ஒருவனைப் பார்த்த பொழுது தான் வாக்குச் சொன்னவனிடம் பேசுவதற்கு நாவெழாது;

உயர்குடியிற் பிறந்தவன் தான் யாதானு மொருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்றுப் பின் அவன் குற்றஞ் செய்ததாக அறிந்தபொழுது அதனையுணர்ந்து நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லமாட்டாது மற்றவன் செய்த நன்றியை நினைத்துச் சாகும்.

கருத்துரை:

புலாலுண்போன் முதலியவர்களின் நாக்கள் சாகும். கொன்றுண்பவனது நாவைக் காலதூதுவர் அறுத்தெடுப்பாராதலின், “கொன்றுண்பான் நாச்சாம் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-21, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே