நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் – அறநெறிச்சாரம் 51

நேரிசை வெண்பா

நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச்செய்கை - பால்வகுத்துப்
பட்டிமையா லாகா பரமார்த்தம் பற்றின்மை
ஒட்டுவான் உய்ந்துபோ வான் 51

- அறநெறிச்சாரம்
.
பொருளுரை:

ஒருவன் சிறந்த ஒழுக்கம் அவன் கற்ற நூலின்கணுளதாகும், நுணுகிய உணர்வை வெளிப்படுத்தும்; ஒருவனுடைய வெறுக்கத்தக்க இழிந்த செய்கை அவனுடைய இழிதகைமையாகிய சிறந்த நூற் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும்; பகுதிதோறும் வேறுபட்டு ஒருவன் செய்யும் படிற்றொழுக்கத்தால் பரம்பொருளை அடைதல் இயலாது; மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன் வீடடைவான்.

குறிப்பு:

நொய்யாவாம் சொல்லின்மை - எளியவாகிய அறிவின்மை எனலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-21, 7:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே