வழி விடு

வழி விடு.

என் ஊரில்
எனக்கிடமில்லை!
வந்தவர்கள்
என் வழியை
மறித்து நின்றார்,
கேட்டால் அடிக்கவும்
உதைக்கவும்
தயங்கமாட்டார்.

புது இடம்
சென்றடைந்தேன்,
என் எண்ணங்கள் காய்களாகி,
சில கனியாக!
கிடைத்தது பேரும்
புகழும்.

வழி மறித்தவர்
எல்லாம் இப்போ!
உன் புகழ் எங்கள்
புகழ் என்றார்,
உன் ஊரை
மறந்திடாதே என்றார்.

என் ஊரை

வந்தவர் ஆழ
எனக்கு உங்கு
என்ன வேலே.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Jan-22, 8:38 am)
Tanglish : vazhi vidu
பார்வை : 129

மேலே