எட்டிக் கொட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கைக்கறுப்பு சன்னி கடிவிஷங்குஷ்ட் டூதைவலி
எய்க்கவரு தாதுநஷ்டம் என்பதும்போம் - மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்கு பித்தமுமில்
எட்டிமரக் கொட்டையினா லே

- பதார்த்த குண சிந்தாமணி

சன்னி, விடக்கடி, குட்டம், வாதவலி, வீரிய நட்டம், கரப்பான், மூர்ச்சை, பித்தம் இவை எட்டிக் கொட்டையால் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-22, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே