புரசங் கொட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வயிற்றுக் கிருமிகணம் வாதமொடு சீதம்
நியத்தபடர் தாமரையும் நீங்கும் - வயிற்று
வலியிரைச்சல் வன்கரப்பான் மாறும்பித் துண்டாம்
மலிபுரசங் கொட்டைதனை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

வயிற்றுக்கிருமி, கணம், வாதவலி, சீதம், படர்தாமரை, குன்மம், வயிற்றிரைச்சல், கரப்பான் இவை புரசங் கொட்டையால் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-22, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே