நற்குணமில்லாரிடத்து நயங்கோடல் கூடாது – அறநெறிச்சாரம் 55

நேரிசை வெண்பா

மால்கடல்சூழ் வையத்து மையாதாங் காத்தோம்பிப்
பால்கருதி யன்ன துடைத்தென்பர் - மேல்வகுத்து
மன்னிய நற்குண மில்லாரைத் தாம்போற்றிப்
புண்ணியங் கோடு மெனல் 55

- அறநெறிச்சாரம்
.
பொருளுரை:

நிலைபெற்ற நற்குணங்கள் இல்லாதவர்களை உயர்ந்தோராகக் கொண்டு துதித்து நாம் புண்ணியத்தினை அடைவோம் என்று நினைத்தல், பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில் சிலர் மலட்டுப் பசுவை மிகவும் பாதுகாத்து அதனால் பாலை அடையக் கருதியிருந்தாற் போலும் என்று பெரியோர் கூறுவர்.

குறிப்பு:

மை-மலடாகிய குற்றம், கோடும்=கொள்+தும்: கோடும்: தன்மைப் பன்மை வினைமுற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-22, 11:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே