மழைகடலாய் பொழியு மின்று

மாறியது மாரி

மாரிமாறி ஊற்றிட மாரி மதிப்பிழக்கும்
மாரிசாரி கேட்காது பாரிங்கு -- காரும்
உடுக்கை யிடையாள் உடுக்கு மயங்கி
விடுவளாம் மாரியை யின்று

மாரியெனும் மழைத் தவறி வேண்டாத காலத்தில் பொழிய மக்கள் வசை பொழிவர்.
அதைப்பற்றி மழை வருத்தம் தெரிவிக்காதது. ஆயினும் மக்கள் உடுக்கையிடை ஆத்தாளுக்கு மாரி பொழிய மாரிஉடுக்கை யடிது வேண்ட சிறு தூறலாவது அன்றைத் தினம் தூவிச் செல்கிறாள். இது உண்மை

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jan-22, 12:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே