தனிச்சுவை இது நகைச்சுவை
கணவன் : மாலா, இன்னிக்கி ராத்திரி என்ன சமையல்?
மாலா: நேத்திக்கி காலை செஞ்ச சப்பாத்தி இருக்கு.
கணவன் : நேத்திக்கி காலை உப்புமா தானே சாப்பிட்டேன்
மாலா : அது முந்தாநேத்து காலை செய்த உப்புமா
கணவன் : அய்யய்யோ , எனக்கு தலை சுற்றுது
மாலா : அது முந்தா நேத்து நீங்க வெளியே ஊஞ்சல்ல ஆடியது
***********
மனைவி : உங்கள நான் செல்லமா திருடன் என்று அழைக்கவா?
கணவன் : ஓ, உன் உள்ளதை நான் கவர்ந்து விட்டேன் என்பதாலா?
மனைவி : அதெல்லாம் ஒன்றும் இல்லை. சமையலறையிலிருந்து என்னுடைய 500 ரூபாய் நோட்டை நீங்கள் கவர்ந்துவிட்டீர்கள்.
**********
கணவன் : நமக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நாம் இன்றும் காதலித்து கொண்டிருப்போம்.
மனைவி : ஆமாம், நீங்க வேறு ஒரு பொம்பளைய, நான் வேற ஒருத்தர
********
ஆசிரியர்: இதோ போர்டில் பாருங்கள் சைபர் போட்டிருக்கிறேன். இதை விட சிறிய நம்பர் உண்டா ?
மாணவன்: இதோ நான் என் நோட்டில் போட்டிருக்கிறேன் சார், போர்டில் உள்ளதை விட சிறிய சைபர்
**********
மாணவன் : சார் நீங்கள் சொல்வது பூகோளமா சரித்திரம்மான்னு எனக்கு சரியாக புரியவில்லை
ஆசிரியர் : எனக்கே அது புரியவில்லை என்னும்போது உனக்கு எப்படி புரியும்?
**********
பயணி : கண்டக்டர், இந்த பஸ் பரங்கி மலைக்கு போகுமா?
கண்டக்டர் : டிரைவருக்கு போதிய முயற்சியும், பஸ்சுக்கு வேண்டிய பெட்ரோலும் இருந்திச்சின்னா மருதமலைக்கு கூட போகும்.
********
டைரக்டர் : இந்த சீன்ல நீங்க கொஞ்சம் செக்ஸியா டிரஸ் பண்ணிக்கணும்
நடிகை : எனக்கு செக்ஸியா டிரஸ் பண்ண தெரியாது. நீங்களே பண்ணி விடுங்க
******
தயாரிப்பாளர் : உங்களுக்கு மொத்த பணத்தையும் முன்னதாகவே கொடுத்து விடுகிறேன். ஆனால் கால் ஷீட்டுக்கு சொன்ன தேதியில் , நேரத்தில் வரவேண்டும்.
நடிகை: அதுக்கென்ன! கால்ஷீட்டுக்கு ஒரு நாள் முன்பே உங்கவீட்டுக்கு வந்துவிடுகிறேன். நீங்களே என்னை கால் ஷீட்டுக்கு கூட்டி செல்லுங்கள்.
*******
பாடகர்: நான் ஒவ்வொரு பாட்டையும் பாடுகையில் இடையிலே " நிறுத்துங்க நிறுத்துங்கன்னு" ஏன் சத்தம் போடுறீங்க?
ரசிகர்கள் : பாட்டை தப்பு தப்பாக பாடினா வேறென்ன சொல்லி சத்தம் போட?
*****

