பொங்கலோப் பொங்கல்

நேரிசை வெண்பாவுடன் ஆசிரியப்பாவில்

கடவுள் கருப்பாம் கசடர் விவாதம்
கடவுள் அருணன் படைப்பு -- சுடரே
கடவுள் வெளிப்பாடா மப்பலோ கண்டோம்
இடர்களை தெய்வம் இறை

அச்சுமாற் றிக்கொள்ளும் ஆதவன் நாளின்று
பச்சரிசி பொங்கலே நைவேதம் --- அச்சம்
மறைந்து குதூகலம் ஆரம்பம் ஆகும்
நிறையுத்ரா தட்சனாயன் என்று

ஊரின் தெருவெலாம் தோரணம் கட்டி
வீடெலாம் வண்ணம் சாத்தி ஆவுடன்
காளைக் கெல்லாம் கொம்பு சீவி
பித்தளை கொப்பும் மணியும் அடித்து
குளிப்பாட் டித்தொழு வத்தில் சீராய்
சங்குடன் மணியும் கருப்புக் கயிரில்
இணைத்து கழுத்தில் கட்டி பட்டி
தொட்டி அடுப்பு மெழுகி மறுநாள்
அருணன் வருமுன் மொத்தமும் தலைக்கு
குளித்து முழுகி புதிய ஆடைகள்
அணிந்து கட்டுக் கல்லின் அடுப்பின்
மேல்புத் தம்புது பானை வைத்து
பசும்பால் காய்ச்சிப் பொங்கல் பொங்க
சூரியனை நோக்கி பொங்கலோ பொங்கல்
என்று இருகைத் கூப்பித்
தொழுவர் குடும்ப முடனூர் செழிக்கவேவருடம் ஒருநாள் வரும்பெரும் பொங்கல்
திருநாளாண் டையாள் இருவர் --- ஒருவர்க்
கொருவர் உறவின் புரிதல் உழவில்
கருகா துளிர்க்கும் அரும்பு

உழவற் குவழங் குமுடை பரிசால்
மழலையெலா மெங்கும் மகிழ --- முழங்கும்
பரையொலி வீதி பறக்குமட லேரு
தரைபாவாக் காளைக்கால் பார்


நட்பதூரும் கேண்மை பரிமாற்றம் பால்பொங்கல்
பெட்பாய் வினவுவர் யெங்கும்பார் ---. நெட்டைமச்சு
தப்பா மணியமினாம் வாங்கக் குழுமும்காண்
ஒப்பி மகிழு முழவு


........

எழுதியவர் : பழனி ராஜன் (10-Jan-22, 1:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 3196

மேலே