விருப்பம் போல் செப்பிடக் கலித்துறை ஆமோ - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

ஐந்து சீருடன் அங்கங்கே பிரித்துமே ஆக்கிச்
செய்து பாவினைச் செப்பிடக் கலித்துறை ஆமோ?
மெய்யாய்ச் சீருமே மேன்மையாய் அமைந்திட மேவும்
பொய்யி லாவகைப் பொங்கிடும் செய்யுளே ஆங்கு!

- வ.க.கன்னியப்பன்

சாதாரணமாக கலித்துறை மூன்று வகைப்படும்!

1.கலித்துறை அல்லது கலிநிலைத்துறை
2.காப்பியக் கலித்துறை
3.கட்டளைக் கலித்துறை

ஒவ்வொன்றுக்கும் தகுந்த இலக்கண வரைமுறை உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jan-22, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே