அட ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

அட ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்;
அன்பை எங்கும் மணக்க செய்கின்றான்;
அன்னை தந்தையரின்; பாசத்தில் இருக்கின்றான்;
அன்பு மனிதர்களின் இதயக் கோவிலில்,
பன்பு பாசம் கருணையாய், குடிகொண்டு இருக்கின்றான்.

அட ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்;
ஆட்டிடும் விசையாய் இருக்கின்றான்;
ஆடிடும் மனிதக்கூட்டத்தை,
அடக்கிடும் ஞானக் கூத்தனாய் வருகின்றான்.

ஆதியும் அந்தமும் இல்லாது;
அகிம்சையில் குடிகொண்டுள்ளான்;
வேண்டுதல் வேண்டாமையில்,
வேதப்பொருளாய் இருக்கின்றான்.
வேதனையைத் தீர்க்கும் மருந்தாய் இருக்கின்றான்.

பரமன் ஒருவன் இருக்கின்றான்;
பகையைத் தீர்க்க வருகின்றான்;
பக்தருக்கு பக்தராய் வந்தே,
பாமரனனையும் காக்கின்றான்.


பகலும் இரவுமாய் வருகின்றான்;
பழுதான மனதை சுமக்கின்றான்;
பல்சுவைக்குள் இருக்கிறான்;
பல்வேறு செயலை செய்கின்றான்;
பசியாற்றும் உணவாய் இருக்கின்றான்;
பழமுதிர் சோலையில்,
உதிக்கின்றான்.

ஞானப்பசியின் கருவாய் இருக்கின்றான்;
ஞாலத்தின் முதல்வனாய் இருக்கின்றான்;
விளங்கிடாத தத்துவப்பொருளாய் இருக்கின்றான்.

நெஞ்சின் உறுதியாய் இருக்கின்றான்;
நேர்மைக் கடலில் மிதக்கின்றான்;
அகந்தையை அன்பினால் வெல்கின்றான்;
அறிவுசார் இனமாக மனிதனைப் படைக்கின்றான்;
பொறியில் சிக்கி தவிக்கும் எலியாய் கிடக்கும் மனிதனின்;
பொறிகளுக்குள் புகுந்து நெறிசெய்கின்றான்;
போய்விடும் உடலுக்குள் உயிராகின்றான்;
பொழுதெல்லாம் பொழுதாய் இருக்கின்றான்;
பொய்யான வாழ்வை வதைக்கின்றான்;
நெறிக்கு நெறியாக இருக்கின்றான்;
நேர்மையெனும் விதையை விதைக்கின்றான்;


அட ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்;
அன்பை எங்கும் விதைக்கின்றான்;

இதயத்தின் இருவழிப்பாதையாய் இருந்தே;
இன்ப துன்பங்களை வடித்தே;
இதயக்கோவிலில் குடிகொண்டு இருக்கின்றான்.

அதிகாலைப்பொழுதாய் வருகின்றான்;
அஸ்தமத்தில் இருளாராய் மறைகின்றான்;
வேதங்களுக்கு வேதநாயகனாய் திகழ்கின்றான்;
மனிதன் வேதனையை மறக்கவே,
மனிதநேயமாய் பிறக்கின்றான்.
இதிகாசம் குரான் பைவில் குரள் என்றே;
வேதமறை நூல் ஆகின்றான்;
வேற்றுலக தேடலிலும் வாதமாய் விவாதமாய் இருக்கின்றான்.

வேதநாயகன் அவன்;
வேதியலாய் இருக்கின்றான்;
வாதிடும் மனிதனின் வாக்கிலும்;
வம்புபேசிடும் மனிதனின்
நாவிலும்;
வயக்காட்டில் உழும் உழவனின்,
சிரிப்பிலும் அமர்ந்திருக்கின்றான்.

வாடிடும் மனிதனின் மனதிலும்;
வழிபடும் மனிதனின் அருளிலும்;
விடியும் என்ற நம்பிக்கையிலும்;
விடை தேடிச் செல்லும் மனிதனின்
தேடலிலும்;
விழுந்து கிடக்கும் மனிதனின் வேதனையிலும்;
பரமன் இருக்கின்றான்.

பகுத்தறிவாளன் சிந்தனையிலும்;
பக்குவப்பட்டவன் மனதிலும்;
ஆண்டவன் இருக்கின்றான்.
வழியும் பாசத்திலும்,
வம்பாய் இருக்கின்றான்.

விடியும் பொழுதாய் இருக்கின்றான்;
விடைகானும் சூத்திரதாரனாய் இருக்கின்றான்;
விருப்பு வெருப்புக்கு அப்பால்,
விடைகாண தவிக்கும் மனிதனின் தேடலில்,
குடி கொண்டிருக்கின்றான்.

வாதிடும் மனிதனின் வாக்கிலும்;
வயக்காட்டில் உழும் உழவனின்,
சிரிப்பிலும் அமர்ந்திருக்கின்றான்.

ஆகம சூத்திரமாக இருக்கின்றான்;
அகந்தையை அழிக்கவே பிறப்பெடுத்து வருகின்றான்;
வேண்டும் வேண்டாமையையின்,
அதிபதியாய் இருக்கின்றான்.
வேத நாயகனும் அவனே.

அன்பு பாசம் என்னும் நேசத்திற்குள்;
உயிரினங்கள் வாழப்பழகிடவே,
அன்பின் ஆசானாய் இருக்கின்றான்.

வேடம் இடும் மனிதனின்;
வேடத்தைக் களைக்கவே;
வேடதாரியாய் இருக்கின்றான்;
கோசம் போடும் மனிதனின்,
கொள்ளைக்குள் இருக்கின்றான்.

கொட்டும் மழைத்துளிக்குள் துகளாக இருக்கின்றான்;
கொட்டும் தேளியின் விடமாக இருக்கின்றான்;
சொட்டும் கருணையில் பாசவடிவாய் இருக்கின்றான்.

அட ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்;
அன்பை எங்கும் விதைக்கின்றான்;
விளக்கின் திரியில் ஜோதியாய் ஜொலிக்கின்றான்;
விலகிடும் மனிதனின் நெஞ்சில் உரமாதய் இருக்கின்றான்;
உதயத்தின் ஒளியாய் இருக்கின்றான்;
உயிரினங்கின் உயிராய் இருக்கிறான்.

விளகிக் செல்லாது இருக்கின்றான்;
விளங்காத தத்துவத்தில் விடைதெரியாத கேள்விக்குள்
விணாவின் விடையாய் இருக்கின்றான்.

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்;
அன்னைவடிவில் கருணையை வடிக்கின்றான்;
அன்பர்களின் அன்பராய் இருக்கின்றான்;
அன்புக்கு அடிபணிந்து கிடக்கின்றான்;
உண்மைக்கு உண்மையாய் இருக்கின்றான்;
உள்ளக் கோவினிலே குடிகொண்டு இருக்கின்றான்;
எண்ணச்சோலையில் உலாவுகின்றான்,
எண்ணியபடி நடக்காது காக்கின்றான்;
மன்னியம் காத்திடவே;
மறுபிறப்பும் எடுப்பான்.
மக்களை மாக்களை நேசிப்பவன் மனதில்;
தெய்வமாய் குடிகொண்டு இருக்கின்றான்.

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பால் கருணையை வடிக்கின்றான்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Jan-22, 1:26 pm)
பார்வை : 119

மேலே