பொங்கும் பால் தங்கும் நாள்

புது பானை மஞ்சள் சூடி புத்தரசி பொங்கி வழிய புத்தாடை சூடி
புன்னகை அணிந்து புது மலர்கொய்து மாலை தொடுத்து

காலை வேளையில் கதிரவனை கண்டு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
கண்டோம் புது ஒளி ...எம் வாழ்வு சிறக்க தமிழர்தம் பண்பாடு ஓங்கிட

உலகெலாம் வாழும் உயிரினம் சிறக்க நன்றி நவின்றோம் இயற்கை வளத்திற்கு வாழிய பொங்கல் .

..பொங்கலோ பொங்கல் குரல் ஒலித்து ...பொங்கும் பால் தங்கும் நாளும் நம்நலம் பெறவே...இறையை வணங்கி இல்லம் செழிக்க...

எழுதியவர் : பாளை பாண்டி, (13-Jan-22, 9:03 pm)
பார்வை : 249

மேலே