ஒலிக்கட்டும், பொங்கட்டும்

காலை முதல் வயல்வெளியில்
கலங்கமுற்றுப் பாடுபடும் விவசாயி, மாலைதனில் வீடுவந்து சேர்ந்து
அப்பாடாஎன இளைப்பாறும் நேரம்.
மனதினிலே வந்துபோகும் விவசாயம்
வாங்கிய கடனும் வட்டியும், கணக்கினிலே சரியாகப் போயிடுமா?
இன்னும் தீராமல் இருந்திடுமோ!.
விழிபிதுங்கி கலங்கிப் போய்
வருந்தி நிற்கும் நிலைதனில், வழிபிறக்கும் "தை"ப் பிறந்தால்
என ஒலிக்கும் அசரிரீ.
ஒலிக்கட்டும் குரல், பொங்கட்டும் பொங்கல் என "ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (14-Jan-22, 9:19 am)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 44

மேலே