நன்றிக் கடனாகும்

ஆணவம் அழிவைத் தருமென
ஆண் அறிந்திருந்தும்—பெண்ணை
அடிமையாக்கி அடக்கி ஆள்கிறான் ,
அன்று முதல் இன்றுவரை
அவளை சமமாக ஏற்காமல்
ஆணை சார்ந்தே வாழ
வினை விதைத்தவன் ஆண் ,
விதியென ஏற்றவள் பெண்

மானுடத்தை மேம்படுத்த வந்த
மதங்கள், மது உண்ட மந்தி போல
ஏற்காததும் வேதனை தான்
ஆணாதிக்க உலகில்
அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி,
போகத்துக்காகவே பெண் என்று
பகட்டு காட்டி ஒதுக்கினால்
பண்புடையதா ? இல்லை வஞ்சகமா ?

அன்போடு ஒற்றுமையுடன்
யாரும், எவருக்கும் அடிமை இல்லை
என ஏற்ற இறக்கம் பார்க்காம
பெண்ணும் ஆசாபாசங்கள் உள்ள
ஒரு ஜீவன் என உணர்ந்து
எல்லோரும் சமமாக வாழ்வது
இறைவனுக்கும் / இயற்கைக்கும்
நாம் செய்யும் நன்றிக் கடனாகும்

எழுதியவர் : கோ. கணபதி. (14-Jan-22, 10:07 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 41

மேலே