வன்கொடுமை

இன்று சமூகத்தில் நடக்கும் மிகப்பெரும் கொடுஞ்செயல் வன்கொடுமை.இதனால் சிறுமி முதல் கல்லூரி பெண்கள் வரை சில சமயங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இக்கொடுஞ் செய்வோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டிவர்கள் தான். அவர்களை தண்டிக்கும் பொறுப்பை காவல் துறையினர் மற்றும் நீதித்துறையிடம் விட்டுவிடுவோம்.சரி பொது மக்கள் ஆகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை. இக்கட்டுரையில் பார்ப்போம்.

பொதுவாக பெண்கள் இக்கொடுமைக்கு ஆளாக காரணம் அவர்களை ஆள வேண்டும் என்ற எண்ணமே காரணமாக அமைகிறது.இது பொதுவாக வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.ஆம் தன் மகனுக்கு இவ்வளவு வரதட்சனை வேண்டும் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது இக்கொடுமை.ஒரு பெண் மற்ற பெண்ணுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து கொண்டு இருப்பது மனித தன்மையற்ற செயல்.

"ஓரு பெண்ணுக்கு வாழ்வில் பல பிரசனைகள் இருக்கிறது.அவள் கனவை களைக்கும் பல புரக்காரணிகள் இருக்கின்றன" அவற்றுடன் நாமும் சேர்ந்து விடக்கூடாது. இது என் அன்னை என்னிடம் சொல்லியது.இது போல அனைத்து தாயும் தன் மகனிடம் பெண்மையை பற்றி பேச வேண்டும்.

ஒரு ஆண் ஒரு கட்டத்திற்கு மேல் தன் தந்தையின் பேச்சை வேண்டுமானால் கேட்காமல் போகலாம்.ஆனால்,தன் தாயின் பேச்சை கட்டாயாம் கேட்பான்.ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் அறிவதை போல், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை மற்றொரு பெண் தட்டி கேக்க வேண்டும். அவன் தன் மகன் என்று நினைகாமல் தன் மருமகளுக்கு உரிமையை பெற்று தர வேண்டும்.

ஆணின் வீரம் அவன் அன்னை, தங்கை, மனைவி, குழந்தையிடம் தோற்று போகும். ஆண் குழந்தையிடம் தயங்காமல் பெண்களை பற்றி பேச வேண்டும். பெண்மையை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.

மனித இனம் இதுவரை பல பரிணாமத்தை சந்தித்துள்ளது. புதிய மாற்றம் நிகழும் பிரச்சனைகள் வருவது இயல்பு தான். முதலில் மனிதன் கத்தியை கண்டுபிடிக்கும் போது தன்னையே பல முறை காயபட்டியுருப்பான். பின்னர் அதை வைத்துக்கொண்டு உலகையே கைபற்ற நினைத்தான் என்பது வேறு கதை.

இப்போ நாம் காண்பது இணைய பரிணாமம் மற்றும் பெண்களின் முன்னேற்றம். இதில் உள்ள நவீன சிக்கலில் ஒன்று வன்கொடுமை. இதில் உள்ள பிரச்சனையை தீர்ப்பது நம் கடமை. ஒவ்வொரு அன்னையும் தன் மகனிடம் பெண்மையை பற்றியும் அதன் அவசியத்தையும் பற்றி பேச வேண்டும். எல்லோர் வீட்டிலும் இதை ஆரம்பித்தால் இது பேன்ற நிகழ்வுகள் நடப்பதை தவிர்கலாம்.

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (15-Jan-22, 10:26 am)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே