உரசல், விரிசல், காதல் பாட்டு 2

அவன்: நானா உன்ன நெனச்சேன்?
நீ தான் என்ன வரிச்ச,
அழகால் கண்ண நிறைச்ச,
அடிமையாக்கி உள்ளே
சிரிச்ச,

அவள்: நானா உன்ன நெனச்சே?
நீ தான் என்ன வரிச்ச,
அன்பால என்ன நனைச்ச,
காதலால கண்ண மறைச்ச.

(அவன்: நானா)

1. அவள்: பாசத்த கடையா விரிச்ச,
நேசத்தில என்ன முடிச்ச,
தேகத்தில் மூழ்கி களிச்ச,
இப்ப சந்தேகத்தில் காதல
கரைச்ச.

அவன்: காதல்னு கயிறு திரிச்ச,
ஆசையிலே முழுசா உரிச்ச,
பூவான மனசுல உதிச்ச
காதல பொய்யின்னு மிதிச்ச.

(பெண்: நானா)

2. அவள்: கனவிலும் என் கூட
வசிச்ச,
அது புரியாம என்னை
எரிச்ச,
வார்த்தை எனும் ஊசில
கிழிச்ச,
கண்ணீர் விடுவதை
பார்த்து ரசிச்ச,

அவன்: புனித காதல்னு வேதம்
படிச்ச,
இணைவது உறுதினு
சொல்லி கையை
இணைச்ச,

கற்பனையில் துணையாகி
துள்ளி குதிச்ச,
உண்மையது புரியாம
இப்ப பிரிஞ்சி நடிச்ச."

(அவன், அவள்: நானா)

எழுதியவர் : (16-Jan-22, 8:06 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 116

மேலே