கோதைக்கிணை யாரோ

கோதைக்கிணை யாரோ?
(இதழகல் வெண்பா)
=========================
நெற்றியில் நீறு நிலைத்தத் திலகத்தாள்
கற்சிலைக் கண்ணுள் கனல்கொண்டாள் – அற்றைநாள்
ஒண்டொடியர் கொண்ட அணிகலன்கள் அன்னநடை
தண்டலைச் சிந்துதேன் தாது
**
தண்ணிலா தோற்றத் தழகுள தாயிரு
கண்காண நேர்த்தியுளக் காரிகையாள் - கண்ணகி
சீதைக் கடுத்துச் சிறந்த’தாய்க் கண்டெடுத்தக்
கோதைக் கிணையாரோ கூறு.
**
(வாசிக்கும் பொழுது உதடு ஒட்டாது)

**மெய்யன் நடராஜ்
17 – 01 - 2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Jan-22, 1:18 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 78

புதிய படைப்புகள்

மேலே