எருக்கு இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எலிவிஷங் குஷ்டமையம் ஏறு கிருமி
வலிசூலை வாயுவிஷம் மந்தம் - மலபந்தம்
எல்லாம் அகலும் எருக்கிலை யைக்கண்டால்
வில்லார் நுதலே விளம்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் எலிவிடம், பெருநோய், ஐயநோய், கிருமி நோய், ஐவகை வலி, கீல் வீக்கம், வாதநோய், விடம், அக்கினிமந்தம், மலக்கட்டு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-22, 8:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே