அந்தியில் ஓர் தெய்வதரிசனம்

மேற்கே சென்று மறந்தான் ஆதவன்
அந்திமயங்கும் அவ்வேளை வந்தது அங்கு
கீழ்வானில் கவ்வும் இரவின் இருளை
சற்று கீறி தோன்றியது மூன்றாம்பிறை
என்னுள்ளத்தில் அந்த காட்சியில் ஓர்
அதிசய தெய்வ தரிசம் கண்டது
ஆம் பித்தன் பிறைசூடியை அல்லவோ
அங்கு அந்த அந்திவேளையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Jan-22, 8:27 pm)
பார்வை : 35

மேலே