அவள் ஓர பார்வையில் ஒரு நொடி

வென்பனியில் செதுக்கிய சிற்பம்
வீதியில் உலவுதுபோல் ஓர் பிம்பம்
பால்வீதியில் கருமைநிற மேகம்போல் அசையும் அழகு கூந்தல்

செழித்த மாம்பழம்போல் கன்னம்
வெடித்த பருத்திபோல வெண்பற்கள்
கடித்த கரும்பு மாதிரி கைகள் அதில் கனுவாய் ஐவிரலில் நகங்கள்

மாதுளைபிஞ்சு வெட்கிட முன்னழகு
மருதாணியும் கருத்திட ஆவல் கொளும் பின்னல் பின்னழகின் எச்சம் ...இதில் இடையழகு சொச்சம்

கடந்து சென்ற சாலையில் காற்றாய் பறந்தாள் பால்வண்ண பதுமை ...
நடந்து சென்றநான் தடுமாறினேன்
அந்நொடியில் ஒரு ஓர பார்வை எனை தாக்க ...பௌர்ணமி நிலவுக்கு

பால்வார்த்தது போல புதுதினசாய் என்கண் கண்ட காட்சிக்கு சாட்சி அந்த வானும் வாடை காற்றுமே
அந்த ஓரபார்வையில் ஒரு நொடி

எனை மறந்தேன் ...அவள்அழகை மறவேன் ...என்றும் மாறா கனவுடன்

எழுதியவர் : பாளை பாண்டி (17-Jan-22, 10:46 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 235

மேலே