நட்சத்திர விதைகள்

நட்சத்திர விதைகள்

வானத்து பரப்புக்குள்
உழவிட்டு விதைத்தாயோ
இந்த நட்சத்திரத்து
விதைகளை..!

மின் மினுக்கும்
நட்சத்திர
விதைகளை

காற்று வந்து
கொண்டு செல்ல
விடாமல்

மேகத்து பொதிகளை
மூடிவிட்டு
பாதுகாத்தாயோ?

சூரியனையும்
சந்திரனையும்
இரவு பகல்
காவல் காக்க
சுற்றி வந்து
பார்க்க சொன்னாயோ?

காவல் இல்லா
இரவு வேளையில்
வானத்தை கண்
கொண்டு
பார்த்து நின்றால்..!

வானெங்கும் சிறியதும்
பெரியதுமாய்
நட்சத்திர விதைகள்
பளிச்சிட்ட பூக்கோலமாய்
நிறைந்து இருக்கிறதே..!

எப்பொழுது
அறுவடை செய்து
எங்களுக்கு
அளிக்கபோகிறாய்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-22, 10:33 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 86

மேலே