சாமியார் என்றால் பால் பாயசம் சுவைக்காதோ

ஆன்மீக நகைச்சுவை

பேச்சாளர்: மனமிருந்தால் இந்த நொடியிலேயே கடவுளை காணலாம்
கேட்பவர்: அப்போ உங்களால் இப்போது கடவுளை காணமுடியுமா?
பேச்சளார்: நான் உங்களில் கடவுளை காண்கிறேன். ஹிஹி ஹி

துறவி: சீடனே, உன்னிடம் உள்ளத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வா
சீடன்: அப்படியே குருவே
துறவி: என்ன எதையோ கையில் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறாயே?
சீடன் : அது ஒண்ணும் இல்லை குருவே, இருட்டில் நமக்கு கண்ணு தெரியவில்லை என்றால் நாம் எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த இடத்தில இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள....


சீடன் 1 : உன்னைவிட என் மேல்தான் நம் குரு பிரியமாக இருக்கிறார்
சீடன் 2 : நம்மை விட உன் சகோதரி சிஷ்யை மீதுதான் அவர் மிகவும் பிரியமாக இருக்கிறார்

முனிவர்; என் தியானநிலையை ஏன் தடுக்கிறீர்கள்?
மக்கள்: இல்லை முனிவரே, நீங்கள் அமர்ந்து தியானம் செய்வது தியான கல் இல்லை எங்களது துணிகளை அடித்துப்போடும் சலவை கல்.

சாமியார்: எனக்கு ஒருபிடி உணவே போதும் என்றேன். இன்னும் ஏன் பாயசத்தை தனியாக கொடுக்கிறீர்கள்?
பக்தர்கள்: பரவாயில்லை சாமி. ஒரு பெரிய அண்டா நிறைய பால் பாயசம் செய்திருக்கிறோம். உங்களுக்கு ஒரு சின்ன பாத்திரத்தில் கொடுப்பதால் ஒன்றும் பெரிதாக குறையாது
சாமியார்( பாயசத்தை குடித்து விட்டு) ஆஹா ஆஹா ஏலக்காய் பச்சை கற்பூரம் சின்ன திராட்சை பாதாம் இவற்றின் மணம் மூக்கை துளைக்கிறது. ஆனால் சர்க்கரை கொஞ்சம் குறைவாகவே உள்ளது. ஐந்து கிலோ சர்க்கரையையும் கூடவே அரை கிலோ நெய்யும் கலந்தால், பால் பாயசம் ஓஹோ ஓஹோ என்று இருக்கும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Jan-22, 5:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 92

மேலே