மேடு பள்ளம்

விடியலுக்கு ஏங்கும் இரவுகள்
உறவுக்கு ஏங்கும் உள்ளங்கள்

விடிந்த இரவுகள் அனைத்தும்
நல்ல வெளிச்சம் தருவதில்லை

மலர்ந்த உறவுகள் அனைத்தும்
நல்ல மகிழ்ச்சியை தருவதில்லை

மேடு பள்ளம் நிறைந்தது தான் மனிதர்களின் வாழ்க்கை

மேடு பள்ளம் இல்லாத
மனிதர்களின் வாழ்க்கை
சுவை இல்லாத வாழ்க்கையே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jan-22, 7:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : medu pallam
பார்வை : 113

மேலே