இளமைக் கொலு

இளைமைக் கொலு.

முகத்தில் இளமை கொலு இருக்கும்,
வீட்டைச் சுற்றி
நிலம் இருக்கும்,
இருக்காது அங்கு
காய்கறித் தோட்டம்.

குனிந்து நிமிர
மனம் வராது,
அது அவர்
படிப்பிற்கு ஆகாது !

முகத்தில் இளமை கொலு இருக்கும்,
உடலில் தொந்தி
கொலு இருக்கும்,
சேர்ந்தே நோய்கள் கொலு இருக்கும்.

கையைக் காலை
அசைக்க மாட்டார்,
மூளையை மட்டும்
அசைத்திடுவார்!
இதனால் வருவது
இந்த வினை!

இவர் என்ன!
இன்னும் இவரைப்
போல் பலர் உண்டு,
முகத்தில் இளமை
கொலு இருக்கும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (19-Jan-22, 2:15 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 55

மேலே