அழகான அறிவியல்

இன்னிசை சிந்தியல் வெண்பா

இருப்பதைக் கொண்டே உலகில் பலதாய்
உயிர்கள் பிறந்து செழித்து வளரவே
செய்வதே ஆக்கும் இறை (க)

பாதைகள் செய்தனர் சென்றிட வேகமாய்
தொல்லை எதுவுமே இல்லா நிலையில்
வளர்ச்சிக் கதுவே படி. (உ)

காசினை ஈட்டிட எங்குமே சுங்கம்
விதிக்கும் நடைமுறை தந்திடும் துன்பம்
அரசுக ளுக்கெதி ராய் (ங)

உணவினை வாங்கலாம் என்றும் பணத்தால்
பணத்தை விதைத்தால் முளையுமோ உண்டி
எனினும் பணமே தலை (ச)

முள்ளைக் கொடுத்து மரத்தை படைத்துமே
எல்லையை வைத்த இறைவன் எதற்கு
விளையவே செய்தான் அதை (ரு)

அமிலமும் காரமும் என்பதாய் ஆயிரம்
ஆய்ந்திட பூமியை தோண்டி மனிதன்
எடுத்ததால் துன்பம் இனி (சா)

இரும்பை இரும்பின் உதவியால் ஓடிட
வைத்து அணித்தொட ராய்வடி விட்டதின்
கண்டுபி டிப்பு எழில் (எ)

மின்னால் எரியும் விளக்கை பலபல
வண்ண வடிவில் அழகாய் படைத்த
மனிதனின் ஆற்றல் கொடை. (அ)

காற்றை உலோகத் தினுள்ளே அடைத்து
பெரியதாய் ஆற்றலை ஆக்கிய வித்தை
அரிதிலும் நுட்ப வகை (கூ)

மண்ணில் எடுத்தபின் எண்ணெயை பக்குவம்
செய்தபின் காற்றில் எளிதில் கரைந்திடும்
தன்மை அறிவின் நிலை (ய)
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Jan-22, 8:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : azhagana ariviyal
பார்வை : 32

மேலே