அரங்கேறும் எப்போதும்

மக்களிடையே காணும்
மாற்றமில்லா ஒரு பழக்கம்
அறிந்தோ, அறியாமலோ
அடுத்தவன் தன்னை விட
எதிலும் மிகையாகாமல்
எப்போதும் பார்த்துக் கொள்வர்

ஒருவன் தனக்கு நிகராக
எவனும் இல்லையென
மார் தட்டிக் கொள்பவனை
மட்டம் தட்ட
இன்னொருவன் கிளம்புவான்
அரங்கேறும் அடி, தடி

வல்லவனுக்கு வல்லவன்
வையத்தில் உண்டு என்பதால்
எவரும், தன்னை உயர்வாக
எண்ணுவதில்லை
என்றாலும் ஆதிக்க வெறியால்
எப்போதும் பகைமை காணும்

முடவனை மூர்க்கன் கொன்றால்
மூர்க்கனை முனியே கொ,ல்லுமென
பாரினில் ஒரு பழமொழி உண்டு
பணமும் , ஆணவமும் அதிகரித்தால்
அடிதடியும் , அடாவடித்தனமும்
அரங்கேறும் எப்போதும்

எழுதியவர் : கோ. கணபதி. (20-Jan-22, 12:44 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : arangerum eppothum
பார்வை : 33

மேலே