அறிந்துகொள்ள விரும்பாமல்

என்
புன்னகையை
ஏற்றுக்
கொள்பவர்களுக்கு


என்
வாழ்த்தைக்
கேட்க காத்திருப்பவர்களுக்கு


என்
வாழ்நாளில்
வந்துபோகும்
கத்திரி காலங்களை உணர்ந்தவர்களுக்கு


என்
இயல்பை
ரசித்து
வணக்கம் சொல்பவர்களுக்கு


ஒரு சொல்லில்
உள்ள
நெடுநாள்
உண்மையை உணர்பவர்களுக்கு
மட்டுமே
புரிகிறது


என்னோடு
பயணிக்க
விரும்பும்
என்னையும்


என்னை
அறியாத
தன்னையும்


என்னை
யார் என்று அறியாதவர்களுகாக
அன்பு செலுத்த விரும்புகிறேன்

யாரையும்
அறிந்துகொள்ள விரும்பாமல்

#சுபா
#பின் இணைப்பு
#003
14-01-2022

எழுதியவர் : சுபாஅருணாசலம் (20-Jan-22, 2:06 pm)
சேர்த்தது : Aadhanan
பார்வை : 79

மேலே