இத்திக்காய் பிஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாயுமலக் கட்டு மலக்கழிச்சல் கால்வழியே
சாயுமசிர்ச் சிக்குள்ளே தங்குவெப்பி - னோயினங்கள்
எத்திக்கா தாரமுற்றி ருப்பனவி ராவேநல்
இத்திக்காய் பிஞ்சுகளை யெண்

- பதார்த்த குண சிந்தாமணி

இத்திக்காய்க்கு வாதமலக்கட்டு நீங்கும்; பிஞ்சுக்கு கழிச்சல், பெரும்பாடு, உட்சூட்டால் ஏற்படும் பிணிகள் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 4:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே