கண்ணால் கிள்ளினேன் என்னவளை

கண்மாய் கரைஓரம் காற்று வாங்கி
காத்து கிடைக்கேன் காணவில்லை

கட்டியவள் கஞ்சி கொண்டு
கொஞ்சி வரும் அழகை காண

வயல் எல்லாம் நிரம்பியாச்சு நீர்
வரப்பு எல்லாம் வழிஞ்சாச்சு உபரி

வஞ்சி அவளை காணாயென் மனம்
நிறையலையே மோர் குடித்தும்

வானம் இருட்டுடுச்சி மேகம் கருத்திடுச்சி மாமன் மக வரலையே

வரும் வழியில் என்ன அசதியோ
வரம்பில்லாமல் தவிக்குது மனசு

வந்தாள் ...அவள் அழகை கண்ணால் கிள்ளிட ஆசை கொண்டிருக்கேன்

கையால் அள்ளிட காத்திருக்கேன்
கட்டழகியின் காதல் மனசை

கொஞ்சு குமரியை பார்த்தால் வரச்சொல்லு வாடை காற்றே

யென்பிஞ்சு மனம் தாளாது என தூது
செல் நெல்மணி தின்னும் பச்சைக்கிளியே பறந்து சென்று...

எழுதியவர் : பாளை பாண்டி (22-Jan-22, 3:46 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 186

மேலே